அதானியை கையில் எடுக்குதா பாமக? இன்னும் எதுக்கு பொறுமை? திமுகவை விடக்கூடாது.. விஷயம் பெரிசாகுது போலயே
சென்னை: , டாக்டர் ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை போனால் போகட்டும் என அப்படியே கடந்து செல்ல முடியாது என்று பாமகவினர் கொந்தளித்து வருகிறார்களாம்.. அதுமட்டுமலல, தமிழக சட்டமன்றத்திலும் அதானி விவகாரத்தை எழுப்ப பாமக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. என்ன நடக்கிறது பாமகவில்?
"ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர்.
அன்புமணி காட்டம்: இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், "முதல்வர்ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்க தேவையில்லை. அந்த அளவுக்கு ராமதாஸ் ஒன்றும் தவறாக எதையும் கேட்டுவிடவில்லை...
அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என்று தான் ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார். அது மிகவும் சரியானதே" என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஸ்டாலின் பேச்சு: எனினும், டாக்டர் ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை போனால் போகட்டும் என அப்படியே கடந்து செல்ல முடியாது, இதற்கு ஏதேனும் உத்தரவிடுங்கள் என்று டாக்டர் ராமதாசிடமும் அன்புமணியிடமும் பாமகவினர் வலியுறுத்தி வருகிறார்களாம்.
இதனிடையே, டாக்டர் ராமதாசிடம் இதுகுறித்து விவாதித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி... பிறகு, தமிழக சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் ஆலோசித்திருக்கிறார் அன்புமணி.
கோரிக்கை: அப்போது, "டிசம்பர் முதல்வாரத்தில் சட்டமன்றம் கூடுகிறது. அப்போது ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக தரப்பில் சபையில் கோரிக்கை வைக்க வேண்டும், அதானிக்கும் ஸ்டாலினுக்குமான சந்திப்பு மற்றும் தொடர்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்சாரத்தை விற்பனை செய்துள்ள விவகாரத்தில் விளையாடிய லஞ்ச ஊழல் விசயத்தை சபையில் விவாதிக்க வேண்டும், இதுகுறித்து மனு கொடுக்க வேண்டும்" என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்புவதும், அதற்கு அனுமதி தர சபாநாயகர் மறுப்பதுமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல தமிழக சட்டமன்றத்திலும் அதானி விவகாரத்தை எழுப்ப பாமக திட்டமிட்டுள்ளது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கட்சிகள் அதானி விவகாரத்தை கையில் எடுப்பார்களா? என்கிற சந்தேகம் பாமகவுக்கு இருக்கிறதாம்.
முளையிலேயே கிள்ளும் திமுக: அதானி-ஸ்டாலின் சந்திப்பு விஷயத்தில், இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி எந்த கேள்வியையும் எழுப்பவில்லை.
இந்த சூழலில், அதிமுகவும் பாஜகவும் அதானி விஷயத்தில் மௌனம் சாதித்தால் பாமக எழுப்ப திட்டமிடும் இந்த விவகாரத்தை முளையிலேயே திமுக கிள்ளி எறிந்து விடும் என்கிற கருத்து பாமக தரப்பில் இருக்கவே செய்கிறது. அதனால் அதானி விவகாரம் சட்டமன்றத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டுமானால், அதிமுக-பாஜகவின் ஒத்துழைப்பு பாமகவுக்குத் தேவைப்படுகிறது என்கிறார்களாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications