தம்பியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்...மு.க ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியின் அசத்தல் வாழ்த்து
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என்று மு.க அழகிரி கூறியுள்ளார். முதல்வராக ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்றும் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறார் மு.க ஸ்டாலின். மே 7ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் அன்றைய தினம் பதவியேற்கிறது.
மு.க ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நேரில் சென்று பூங்கொத்துக்களைக் கொடுத்தும் தொலைபேசியிலும் ட்விட்டரிலும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அண்ணனின் வாழ்த்து
ஆயிரம் பேர் வாழ்த்தினாலும் அண்ணன் அழகிரியின் வாழ்த்து போல வருமா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே இருந்தது. இந்த நிலையில் அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் மு.க அழகிரி கூறியுள்ளார்.

நல்லாட்சி தருவார்
முதல்வராக ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகாலமாகவே மு.க ஸ்டாலின், மு.க அழகிரி இடையே பனிப்போர் நிலவி வந்தது. திமுக தலைவராக பொறுப்பேற்கும் முன்பிருந்தே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

கடும் விமர்சனம்
சட்டசபைத் தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மு.க அழகிரி கூறியிருந்தார். மு.க அழகிரி தனிக்கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் செய்யவே அதை ஏற்றுக்கொண்டு அமைதியானார் மு.க. அழகிரி.

திமுக ஆட்சி
கடந்த 10 ஆண்டு காலமாகவே திமுக எதிர்கட்சியாகவே இருந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது திமுக. இந்த வெற்றி குறித்து மு.க அழகிரி எந்த கருத்தும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள தம்பி மு.க. ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்று வாழ்த்து கூறியுள்ளார் அண்ணன் மு.க அழகிரி. திமுகவில் மீண்டும் அழகிரி இணைத்துக்கொள்ளப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications