25 வருடங்களுக்கு பின்.. மாறிய காட்சிகள்.. பழசை நினைத்து உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 25 ஆண்டுகளுக்கு முன் மேயராக நுழைந்த ரிப்பன் மாளிகைக்குள் இன்று முதலமைச்சராக நுழைந்தேன் என்று ட்வீட் போட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், எண்ணற்ற நினைவுகள் தமக்கு வந்து போவதாக கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மேயராக 1996ல் முதல் முதலாக பதவியேற்றவர் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக ஐந்து ஆண்டுகள் இருந்தார் ஸ்டாலின்.

சரியாக 25 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரிப்பன் மாளிகைக்குள் இன்று முதலமைச்சராக நுழைந்த ஸ்டாலின் பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதாக கூறியுள்ளார்.

1980களில் தொடக்கம்

1980களில் தொடக்கம்

ஸ்டாலினின் அரசியல் பயணம் தீவிரமாக தொடங்கியது 1980களில் தான். 1980களில் திமுக இளைஞரணி துவக்கப்பட்ட போது அதன் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் 1984ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் மூலம் முதன்முதலாக தேர்தல் அரசியலில் கால்பதித்தார் . ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் 1989ல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சென்னை மேயர்

சென்னை மேயர்

அதற்குப் பிறகு 1991ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் 1996ல் நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதாவது 25 வருடங்களுக்கு முன்பு சென்னை மேயராக .

Recommended Video

    பெரியாருக்கு 100 கோடியில் சிலை.. முதல்வர் Stalin வெளியிட்ட அறிவிப்பு
    மழைநீர் கால்வாய்

    மழைநீர் கால்வாய்

    மாநகராட்சியின் மேயராக இருந்த அந்தத் தருணத்தில் மு.க. ஸ்டாலினின் பணிகள் பெரும் கவனத்தைப் பெற்றன. 'சிங்காரச் சென்னை' என்ற முழக்கத்தை முன்வைத்த ஸ்டாலின், அதற்கென சில குறிப்பிடத்தக்க திட்டங்களைச் செயல்படுத்தினார். குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்தினார். சென்னையின் பல்வேறு இடங்களில் 9 மேம்பாலங்களைக் கட்டினார். அந்த பாலங்கள் இப்போதும் பேசப்படும் திட்டங்களாக இருக்கின்றன. 1996ல் சென்னையில் கடுமையான மழை பெய்தபோது, ஸ்டாலின் செய்த பணிகள் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றன.

    உள்ளாட்சி துறை அமைச்சர்

    உள்ளாட்சி துறை அமைச்சர்

    2001ஆம் ஆண்டுத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.க. ஸ்டாலின், மீண்டும் சென்னையின் மேயராகவும் வெற்றிபெற்றார். ஆனால், ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதால், தனது மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்தார். அதன்பிறகு 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் அடுத்த சில ஆண்டுகளில் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், 2021ல் தமிழகத்தின் முதல்வராகி உள்ளார்.

     ஸ்டாலின் ட்வீட்

    ஸ்டாலின் ட்வீட்

    25 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகராட்சியின் மேயராக ரிப்பன் மாளிகைக்குள் நுழைந்த ஸ்டாலின், இன்று முதலமைச்சராக நுழைந்திருக்கிறார். அங்கு நடந்த பல்வேறு நிகழ்வுகளை எண்ணிப்பார்ப்பதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டுக்கு 1684 பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்பாக்டர் வாகனங்களைத் தொடங்கி வைத்து; கருணை அடிப்படையில் 195 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+