9 டாக்டர்ஸ்.. 31 வக்கீல்கள்.. திமுகவின் மலைக்க வைக்கும் லிஸ்ட்.. திட்டமிட்டு தேர்வு செய்த ஸ்டாலின்
சென்னை: இன்று வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று படித்தவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியது போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது. இன்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியலில் பல சுவாரசியமான விவரங்கள் அடங்கி உள்ளன.
திமுகவில் பொதுவாக வேட்பாளர் தேர்வில் படித்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல் இந்த முறையும் வேட்பாளர் பட்டியலில் படித்தவர்கள் பலர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மருத்துவர்கள்
9 மருத்துவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.எம்பி தேர்தலிலும் டாக்டர். எஸ் செந்தில்குமார் போன்ற மருத்துவர்களுக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது போல சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் லிஸ்ட்:
1.புதுக்கோட்டை-Dr.முத்துராஜா
2.ஆலங்குளம் - Dr.பூங்கோதை
3.பொள்ளாட்சி - Dr.வரதராஜன்
4.இராசிபுரம் - Dr.மதிவேந்தன்
5. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண்
6. விழுப்புரம்- Dr.லட்சுமணன
7.மைலம்- Dr.மாசிலாமணி
8.பாப்பிரட்டிப்பட்டி- Dr.பிரபு ராஜசேகர்
9.ஆயிரம் விளக்கு- Dr.எழிலன்

வக்கீல்கள்
அதேபோல் இந்த வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 31 வக்கீல்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவில் எப்போதும் வக்கீல்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். திமுகவின் வழக்கறிஞர் அணி பெரியது என்பதால் இந்த முறையும் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் அளிக்கப்பட்டுள்ளது. 13 பொறியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முனைவர்
இது போக 6 முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 20 முதுகலை பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 4 இளங்கலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 20 இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு
இதன் மூலமும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை சல்லடை போட்டு தேர்வு செய்துள்ளார் என்பது உறுதியாகிறது. படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு துறையை சேர்ந்தவர்களை சல்லடை போட்டு தேடி எடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் திமுக தேர்வு செய்த வேட்பாளர்கள் போலவே இவர்களும் நல்ல பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் .
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications