தவெக பினிஷ்டு.. கொடைக்கானலில் செல்ஃபி கேட்ட சிறுமி! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்
திண்டுக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு திரண்டிருந்த மக்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்தனர். அப்போது, முதல்வர் ஸ்டாலினின் வைரல் சைகையான பினிஷ்டு என்ற சைகையை காட்ட சொல்லி சிறுமி ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஸ்டாலினும் பினிஷ்டு சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கொடைக்கானல் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளில் பம்பரமாக சுற்றி வந்த ஸ்டாலின், தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். சுமார் 4 நாட்கள் கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"தவெக பினிஷ்டு"
சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலினை பார்த்த பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கொடைக்கானலுக்கு எண்ட்ரி கொடுத்த போதும், ஸ்டாலினுக்கு சுற்றுலா பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது சுற்றுலா பயணி ஒருவர், முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினின் வைரல் சைகையான பினிஷ்டு என்ற சைகையை காட்ட சொன்னார். சுற்றுலா பயணியின் குடும்பத்தினர் தவெக பினிஷ்டு என்று சொல்லு.. என்று கூறி "முதல்வர் ஸ்டாலினிடம் செல்பி எடுக்க கூறினர். உடனே அந்த சிறுமியும் தவெக பினிஷ்டு என்று கூறி சைகை காட்ட முதல்வர் ஸ்டாலினும் சைகை காட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் ஆன சைகை
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகு காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை கடும் இழுபறியில் சென்றது.. காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பினர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இன்னொருபக்கம் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடித்தது. இதனால், நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.
ஒரு ராஜ்யசபா சீட், 28 தொகுதிகள் என காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், கூட்டணி முடிவான பிறகு வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், தனது காரில் ஏறுவதற்கு முன்பாக அங்கு இருந்த பத்திரிகையாளர்களை பார்த்து பினிஷ்டு என்று சொல்வது போல சைகை காட்டினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த சைகை அப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.












Click it and Unblock the Notifications