அம்மா உணவகம் அடியோடு மாறுது.. தேனாம்பேட்டையில் ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவக ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அம்மா உணவகங்களை அடியோடு மாற்றி சிறப்பாக பராமரிப்பதற்கு ஏதுவாக ரூ.21 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
ஏழை-எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அம்மா உணவகங்களில் சரியாக உணவுகள் விநியோகம் இல்லை என்றும், அம்மா உணவகங்கள் நலிவடைந்து விட்டதாகவும். அம்மா உணவகங்கள் பல இடங்களில் பராமரிப்பு இன்றி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து இன்று தேனாம்பட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அம்மா உணவகங்களை அடியோடு மாற்றி சிறப்பாக பராமரிப்பதற்கு ஏதுவாக ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை மாநகராட்சியின் 200 கோட்டங்களிலும், அரசு மருத்துவமனையிலும் கடந்த ஆட்சி காலத்தில் 388 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை மக்களுக்கு பயனளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்த உணவகங்களின் மூலம் தினசரி 1.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறறு வருகின்றனர். ஓர் ஆண்டில் 4 கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் மூலம் பெறப்படுகிறது.

இந்த உணவகங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.148.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை சென்னை மாநகராட்சியால் ரூ.400 கோடி உட்பட ரூ.469 கோடி செலவிடப்பட்டு உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததுடன், உணவருந்திய பயனாளிகளுடனும் உரையாடினார்.
பல்வேறு உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடியில் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும், ரூ.14 கோடியில் இந்த உணவகங்களை புனரமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வபோது நேரில் ஆய்வுசெய்து, தேவையான உதவிகளை செய்து தரும்படி அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications