Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு 2 லட்சம் தரும் தமிழக அரசு.. தொழில் தொடங்குவோர் அறிய வேண்டிய புதிய மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தகுதியுடைய பெண் தொழில்முனைவோர்கள், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தயாரிப்பு, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்க முடியும். இதில் கணிசமான மானியத்தை அரசே வழங்குகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 'குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனர்களுக்கு மானியத் தொகைகளை வழங்கினார். அதன் விவரங்களை பார்ப்போம்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் வகையில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்தொகைகளை வழங்கினார்.

Women Entrepreneurship

2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள். விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண் தொழில்முனைவோர்கள், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தயாரிப்பு, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்கவும், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் கலைஞர் கைவினைத் திட்ட பெண் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கூடுதல் கடன் பெறவும், அரசு மானியமாக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவிகித மானியம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை) வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும், 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்/மூன்றாம் பாலின தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித் தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 261.93 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 22,356 விண்ணப்பங்கள் இணையவழியாக பெறப்பட்டு அவற்றில் 160.89 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 13,779 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், 27.01 கோடி ரூபாய் மானியத்திற்கான 2,261 விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திட்ட விவரம்: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்

மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கடன் எவ்வளவு வாங்கலாம்: அதிகபட்சம் ₹10 லட்சம் வரை கடன் பெறலாம்.

மானியம் எவ்வவு கிடைக்கும்: திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் வழங்கப்படும் (அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை).

பயனாளியின் பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்: திட்ட மதிப்பீட்டில் வெறும் 5% மட்டும் முதலீடு செய்தால் போதும்.

சிறப்பம்சம்: இதற்கு எந்தவிதமான பிணையும் தேவையில்லை.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

இது படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

கடன் எவ்வளவு வாங்கலாம்: ₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை.

மானியம் எவ்வளவு அரசு தரும்: திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் வழங்கப்படும் (அதிகபட்சமாக ₹75 லட்சம் வரை).

பெண்களுக்கு கூடுதல் சலுகை: பெண்களுக்கு வட்டி மானியமாக 3% சலுகையும் உண்டு.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கான திட்டம் ஆகும்

கடன் எவ்வளவு வாங்கலாம்: உற்பத்தித் துறைக்கு ₹15 லட்சம், சேவை/வியாபாரத் துறைக்கு ₹5 லட்சம் வரை.

மானியம்: திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் வழங்கப்படும் (அதிகபட்சமாக ₹2.50 லட்சம் வரை).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+