கொஞ்சம் மனசு வைங்க சார்.. தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா? தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் சனி (அக்டோபர் 18) மற்றும் ஞாயிறு (அக்டோபர் 19) என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கூடுதலாக அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இதனால், மொத்தம் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, இனிப்பு, பட்டாசு, புத்தாடை என நாட்டெங்கும் கொண்டாட்டம் நிறைந்த சூழல் நிலவும். வெளியூர் வேலைக்குச் சென்றவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு வந்து குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.

இதனால், அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) இரவு முதலே பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் பெரும் நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தீபாவளி முடிந்ததும் அக்டோபர் 20 இரவு அல்லது 21 காலை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பிச் செல்ல மக்கள் திட்டமிட்டுள்ளதால், பேருந்து மற்றும் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

MK Stalin Holiday Diwali

தீபாவளி விடுமுறை

இதனால், கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால், பண்டிகைக்குப் பின் ஊரில் இருந்து திரும்புவோரின் சிரமம் குறையும் என மக்கள் கருதுகின்றனர். இதுபோல், கடந்த ஆண்டுகளிலும் தீபாவளிக்கு முன்னோ அல்லது பின்னோ அரசு ஒரு நாளை கூடுதலாக விடுமுறை வழங்கி, அதன் ஈடாக வேறொரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதேபோல செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை விடப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி அன்று செவ்வாய்க்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து, அடுத்த வரும் சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்கலாம் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

போனஸ் அறிவிப்பு

இதற்கிடையில், அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ், வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10% போனஸ், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், பண்டிகை மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க மக்கள் விரும்புவதால், மறுநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை விடுமுறை

இதுகுறித்து தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை இரவே சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால், கூடுதலாக 21ஆம் தேதி தீபாவளி விடுமுறை அறிவிப்பை முன்னதாகவே வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அரசு ஊழியர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+