துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு... ஸ்டாலின் வாழ்த்து
பிரியங்கா காந்திக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்" என்று உ.பி., கிழக்கு மண்டல காங்கிரஸ் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்காவை நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்தார். இந்த பணியை பிரியங்கா வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ள போகிறார்.

புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளதால், பிரியங்காவுக்கு நேற்றுமுதல் அகில இந்திய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இதில் முதல் ஆளாக தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் ராபர்ட் வதேராதான்.
இந்நிலையில், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று இந்திய அரசியல் கட்சி தலைவர்களிலேயே முந்திக் கொண்டு சொன்ன ஸ்டாலின், பிரியங்காவுக்கு தனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
I wholeheartedly congratulate #PriyankaGandhi on her joining active politics and wish her the best in this new role.
— M.K.Stalin (@mkstalin) January 24, 2019
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சொல்லி இருப்பதாவது: "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications