இலங்கை சுதந்திர தினம்: தமிழில் தேசிய கீதம் இல்லை- இந்தியா கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்ற பின்னர், சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமாட்டாது என அறிவித்தார். இதற்கு இலங்கை தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இலங்கை அரசின் போக்கு கண்டனம் தெரிவித்தும் இருந்தனர். இந்நிலையில் இன்று இலங்கையின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
ஆனால் வழக்கமாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கைவிடப்பட்டிருந்தது. இதற்கு உலகத் தமிழர்கள் கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) February 4, 2020
இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று நிதியுதவி அளித்தது இதற்காகவா? இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும். pic.twitter.com/1UyyQOD86t
திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று நிதியுதவி அளித்தது இதற்காகவா? இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications