திமுக முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவு.. இரவோடு இரவாக நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். முன்னாள் அமைச்சர் சுந்தரம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம், பொன்னேரி (தனி) தொகுதியில் கடந்த 1989, 1996 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 1989-91-ல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், 1996-2001-ல் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

மேலும், திமுக துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ள சுந்தரம், திமுகவின் ஆதிதிராவிட நலக்குழு தலைவராக பதவி வகித்து வந்தார். க.சுந்தரத்துக்கு கடந்த ஆண்டு நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சுந்தரம் இன்று காலமானார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். க.சுந்தரம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த க. சுந்தரம், கழகம் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த காட்சிகள் இப்போதும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் க.சுந்தரம் அவர்களது கழகப் பணிகளைப் பாராட்டி அண்ணா விருதினையும் வழங்கியிருந்தேன்.
கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க.சுந்தரம் அவர்களது மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் ஏராளமான திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications