செம பரிசு.. பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த.. கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி!
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்த என்.கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 150-க்கும் அதிகமான இடங்களை பெற்றது.

ஸ்டாலின்
இதன் மூலம் தமிழகததில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைய இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட உள்ளார். அவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அமைச்சரவை பட்டியல் வெளியீடு
இந்த நிலையில் புதிய திமுக அரசின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் துரைமுருகனுக்கு நீர்பாசனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக அமைச்சரவை பட்டியலில் அனுபவம் வாய்ந்தவர்களும் உள்ளனர்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை பட்டியலில் எல்லோரையும் திரும்பி பார்க்கும் வைக்கும் வகையில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுளள்து.

கயல்விழி செல்வராஜூக்கு பதவி
அதாவது தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்த என்.கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். என்.கயல்விழி செல்வராஜூ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்.முருகனை தோற்கடித்தவர்
ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் நலன் துறையை இவர் கவனிப்பார். தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் எல்.முருகனை 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிதத்தவர் என்.கயல்விழி செல்வராஜ். இதனை கருத்தில் கொண்டே தற்போது என்.கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications