அடேங்கப்பா.. ரூ.2000 கோடியா? புதிய மருத்துவ கட்டமைப்புகளை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் 44 புதிய மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகளும் அடங்கும்
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டு இருக்கும் புதிய மருத்துவ கட்டமைப்பு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன் சுகாதாரத்துறையில் புதிய நியமனங்களுக்காக தேர்வான நபர்களுக்கு பணி ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனை கட்டிடங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
அதில் 44 புதிய மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகளும் அடங்கும். இந்த நிலையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டமைப்புத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை நிகழ்ச்சி
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் ரூ.2,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய மருத்துவ கட்டமைப்புகள் தொடக்க விழா, 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சுகாதாரத்துறைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.

ஏற்றமிகு 7 திட்ட தொடக்க விழா
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட ஏற்றமிகு 7 திட்ட விழாவில் ரூ.2,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைத்த ஸ்டாலின்,, 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டியதுடன் மற்றும் சுகாதாரத்துறைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மருத்துவ பணியிடங்கள்
அந்த வகையில் காலியாக இருந்த 4,308 மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சில பணி நியமன ஆணைகள் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன." என்று தெரிவித்து இருக்கிறார்.

ரூ.2,000 கோடி கட்டமைப்புகள்
தொடர்ந்து பேசிய அவர், "சித்தா, ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லாத அளவுக்கு அனைத்து மருத்துவர்களின் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசு நிரப்பி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் ரூ.2,000 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவ கட்டமைப்புகளை திறந்து வைக்கிறார்.

புதிய நியமனங்கள்
மேலும், தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் கட்டமைப்புகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் வைக்க வைக்க உள்ளார்." என்றார். இந்த நிலையில் காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறையில் புதிய நியமனங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பணி ஆணைகளையும் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications