இவங்க ஒருத்தரும் ஜெயிக்கக் கூடாது.. தோற்கடிங்க.. மா.செ.க்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.. !
சென்னை: தற்போது அதிமுக சார்பில் உள்ள அமைச்சர்களை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று அவர்கள் சார்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். வலுவான வேட்பாளர்களை நிறுத்தி, அமைச்சர்களாக உள்ள அனைவரையும் தோற்கடிக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் திட்டமாம்.
பொதுவாக அதிமுக மற்றும் திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவார்கள. ஒரே மாவட்டமாக இருந்தால், அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் நட்பும் இருக்கும். ஆனால் வெளியில் தெரியாது.
இவர் தொகுதியில் அவரும், அவர் தொகுதியில் இவரும் தப்பித்தவறி கூட நிற்கமாட்டார்கள். அந்த அளவிற்கு எழுதப்படாத மறைமுக ஒப்பந்தமாக இதுவரை இருந்து வருகிறது.

ஐ பெரியசாமி
ஆனால் கடந்த முறை சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த போக்கை முதல்முறையாக உடைத்து எரிந்தார. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல வருடங்களாக எம்எல்ஏவாக இருப்பவர் ஐபி எனப்படும் ஐ பெரியசாமி. தென் மாவட்டங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க திமுக தலைவர். இவரை தோற்கடிப்பது மிகவும் சவாலான விஷயமாக அதிமுகவிற்கு இன்று வரையும் இருந்து வருகிறது.

தோல்வி
இதை உடைக்க விரும்பிய ஜெயலலிதா, திண்டுக்கல்லில் செல்வாக்கான அமைச்சராக திகழ்ந்த நத்தம் விஸ்வநாதனை ஐ பெரியசாமிக்கு எதிராக களம் இறங்கவைத்தார். ஆனால் தொகுதி மாறிய நத்தம் விஸ்வநாதனால் அங்கு வெல்ல முடியவில்லை. ஒருவேளை அவர் வென்றிருந்தால் 2016ல் நிச்சயம் அமைச்சராகி இருப்பார்.

தோற்கடிக்க வேண்டும்
இந்நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா எடுத்த அதே முடிவினை இப்போது ஸ்டாலின் எடுக்க உள்ளாராம். வலிமையான அதிமுக தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேரையும் இந்த முறை தோற்கடித்தே தீர வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின். இதற்கான அசைன்மெண்டை திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்துள்ளாராம்.

மாவட்ட செயலாளர்கள் திகைப்பு
நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. அதிமுக அமைச்சர்களை இந்த முறை தோற்கடித்தே ஆக வேண்டும். அதற்கு தீவிரமாக களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளாராம் ஸ்டாலின். அமைச்சர்களை பற்றி இதுவரை அனுப்பிய ஊழல் புகார்கள். அமைச்சர்களை எதிர்த்து எத்தனை முறை போராடினார்கள் என்பது போன்ற விஷயங்களை கேட்டதுடன். கட்டாயம் தோற்கடித்தே வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதனால் திமுக மாவட்ட செயலாளர்கள் என்ன செய்வது என்று திகைப்பில் உள்ளார்களாம். அதிமுகவிலோ ஸ்டாலினின் அதிரடியால் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications