போதி தர்மரின் மரபணு வழி வந்தவர் ஸ்டாலின்! செல்வப்பெருந்தகை பேச்சு! ஜால்ரா என அதிமுக எம்எல்ஏ கிண்டல்!
சென்னை: போதி தர்மரின் மரபணு வழி வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டியுள்ளார்.
விளையாட்டுத்துறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
இவர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பாப்பிரெட்டியபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, சைகையால் ஜால்ரா அடிப்பதாக சக உறுப்பினர்களிடம் கூறி கிண்டல் செய்தார்.

விளையாட்டுத்துறை
சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம், அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று அறிவித்தார்.

செல்வப்பெருந்தகை பேச்சு
அதனை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, போதி தர்மரின் மரபணு வழி வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். போதிதர்மர் தான் உலகம் முழுவதும் தற்காப்பு கலைகளையும், விளையாட்டையும் பரப்பியதாகவும் இன்று அவர் வழியில் நின்று தமிழகத்தில் விளையாட்டுத்துறையை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார் எனவும் செல்வப்பெருந்தகை பேசினார்.

அதிமுக எம்.எல்.ஏ.
செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பாப்பிரெட்டியபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, சைகையால் ஜால்ரா அடிப்பதாக சக உறுப்பினர்களிடம் கூறி கிண்டல் செய்தார். சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதைக் கூட மறந்து விளையாட்டுத்துறை பற்றிய அறிவிப்புகளை வரவேற்று பேசிய போது, அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி விளையாட்டு பிள்ளையை போல் விளையாடிக் கொண்டிருந்தார்.

முதல்முறையல்ல
பாப்பிரெட்டியபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. பல முறை இதேபோல் சட்டசபையில் அமர்ந்துகொண்டு சைகையால் சக உறுப்பினர்களிடம் கிண்டல் அடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் இவ்வாறு செய்வதை அதிமுகவை சேர்ந்த சக உறுப்பினர்களே கண்டுகொள்ளாமல் நேரலை ஒளிபரப்பை மனதில் தாங்கி பொறுப்புடன் நடந்துகொண்டதையும் காண முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications