Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார்..வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று இரவு ஸ்பெயின் புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போது அந்த பகுதிகளில் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழகு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 MK Stalin leaves for Spain tonight: 10 days tour to attract foreign investments

அதன் ஒரு பகுதியாகவே கடந்த ஜனவரி 7, 8-ந் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வழக்ககமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தான் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்ய விரும்பும். ஆனால் இந்த முறை தென்மாவட்டங்களில் கணிசமான நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டின. குறிப்பாக ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு அதிகமான முதலீடுகள் வந்துள்ளன

இந்தநிலையில், முதலீட்டாளர் மாநாடு முடிந்த பின்னரும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (சனிக்கிழமை) இரவு வெளிநாடு புறப்படுகிறார். இதற்காக இரவு 9.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்கிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்பெயின் சென்ற உடன், அங்குள்ள பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, முதல்வர் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 10 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+