ஜெயலலிதா-வுக்கு நடந்த அதே விஷயம் ஸ்டாலினுக்கும் நடந்திருக்கும்.. அடபாவமே.. கருணாநிதி மட்டும் இதுல கில்லி!
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பல முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது, ஒருப்பக்கம் விஜய் முதல் தேர்தலிலேயே முதல்வராவதில் துவங்கி முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இத்தேர்தலில் தவெக வேட்பாளரிடம் தேற்பது வரை அனைத்துமே சரித்திரத்தை புரட்டிப்போடும் விஷயமாக விளங்குகிறது.

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு
திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் சென்னையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரிய அதிர்ச்சியை தமிழ்நாடு அரசியலுக்கு கொடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அவருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.
ஆரம்ப சுற்றுகளிலேயே 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்த ஸ்டாலின், 10 சுற்றுகள் கடந்த பிறகும் 7,975 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு இந்தத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இந்த பின்னடைவு தமிழ்நாட்டு அரசியலில் புதிய மாற்றத்தை உணர்த்துகிறது.
முதலமைச்சர்களின் தேர்தல் தோல்விகள்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருந்தவர்கள் கூட தேர்தலில் தோல்வியை சந்தித்திருப்பது புதிதல்ல, ஆனால் மிகவும் அரியது. வெகு சிலர் மட்டுநே இத்தகைய தோல்வியை சந்தித்துள்ளனர்.
1952 தேர்தலில் முதல் முதலமைச்சரின் தோல்வி
தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்களான பி.எஸ்.குமாரசாமி ராஜா, 1952 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அப்போது ஆட்சியில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் டி.கே.ராஜாவிடம் தோற்றார். இது தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒருவர் தேர்தலில் தோற்ற முதல் சம்பவமாக பதிவாகியது.
1967 தேர்தலில் கே.காமராஜ் தோல்வி
1967 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கே.காமராஜ், விருதுநகர் தொகுதியில் திமுகவின் இளம் மாணவர் தலைவர் பி.சீனிவாசனிடம் சுமார் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது.
எம்.பக்தவத்சலம் தோல்வி
அதே தேர்தலில் மற்றொரு முதலமைச்சர் எம்.பக்தவத்சலமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் டி.ராஜரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இரு தலைவர்களும் ஒரே தேர்தலில் தோற்றது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
1996இல் ஜெ.ஜெயலலிதாவின் தோல்வி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைவரான ஜெ.ஜெயலலிதா, 1996 தேர்தலில் முதலமைச்சராக இருந்தபோதே தோல்வியை சந்தித்தார். பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார். அவரது அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தி அலை இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.
1988இல் வி.என்.ஜானகி ராமச்சந்திரனின் தோல்வி
அதிமுகவைச் சேர்ந்த வி.என்.ஜானகி ராமச்சந்திரன் 1988இல் சிறிது காலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது அரசியல் வாழ்க்கையில் அவர் ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார். ஆண்டிப்பட்டி தொகுதியில் அவர் தோற்றுப் போனார். இது அவரது அரசியல் பயணத்தின் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு முழுவதும் இத்தகைய தோல்விகள் பதிவாகியுள்ளன. 2026 தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் சந்தித்துள்ள பின்னடைவு, முதல்வராக இருந்து தேர்தலில் தோற்றுப்போனவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
முக.கருணாநிதி என்னும் சகாப்தம்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் இருந்தவர். கருணாநிதியின் 61 ஆண்டுகால அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் கூட தோல்வியை சந்தித்தது இல்லை, இது தமிழ்நாட்டில் இன்றளவும் யாரும் தொட முடியாத, அடைய முடியாத ஒரு அரிய சாதனையாகும்.
கருணாநிதியின் 1957 முதல் 2016 வரையிலான அரசியல் வாழ்க்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 13 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1957ஆம் ஆண்டு கருணாநிதி முதன் முதலாக குளித்தலை தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டிப்போட்டதில் தொடங்கியது 2016ஆம் ஆண்டு வரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications