அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளித்தல், திருநங்கைகளை தி.மு.க.வில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், தி.மு.க. அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடித்தல், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைத்தல், தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், இணைய தளம் மூலம் தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்தல், வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகமெங்கும் திமுக பொதுக்குழு தீர்மானங்களை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது திண்ணை பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications