அறிவாலயம் போலாமா.. அறிவாலயம்.. அன்பழகனின் கையை பிடித்து கேட்ட ஸ்டாலின்
பேராசிரியர் அன்பழகனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video

சென்னை: அறிவாலயம் போலாமா?.. என்று பேராசிரியர் அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்து கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளர் க.அன்பழகன். இவருக்கு இப்போது வயது 97 ஆகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து கொண்ட அன்பழகன், இப்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், பல கட்சி பணிகளுக்கு இடையிலேயும் ஸ்டாலின் இன்று பேராசிரியரை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில் அன்பழகன் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.
அவர் அருகில் ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அன்பழகனின் கையை பிடித்து கொண்ட ஸ்டாலின் அவரிடம் குனிந்து, "அறிவாலயம் போலாமா.. அறிவாலயம்.." என கேட்கிறார். அதற்கு பேராசிரியர் கையசைத்து பதில் சொல்கிறார்.
ஸ்டாலின் சொன்னதை காதில் கேட்டு, புரிந்து கொண்டு பேராசிரியர் பதில் சொன்னதால் துரைமுருகன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் சிரிக்கிறார்கள். இந்த வீடியோ திமுக தரப்பில் படுவைரலாகி வருகிறது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications