சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமகவை வைத்து அதிமுக அடித்த மாஸ்டர் ஸ்டிரோக்.. தப்பு செய்து விட்டதோ திமுக?

மு.க.ஸ்டாலின் பாமக தரப்பு வாய்ப்பினை தவறவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை: மிகப்பெரிய தவறை திமுக தலைவர் செய்துவிட்டாரோ என்றுதான் சொல்ல தோன்றுகிறது, அதிமுக பாமக கூட்டணி அமைந்துள்ளதைப் பார்த்தால்.

    2 மாதமாகவே கூட்டணி சம்பந்தமான பேச்சு தமிழகத்தில் அடிபட தொடங்கிவிட்டது. திமுகவில், காங்கிரஸ் மட்டும் உறுதியான நிலையில், வேறு யார் இருக்கா, இல்லையா என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது.

    நாங்கள் கூட்டணிக்குள் இருக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்லிகொண்டு இருக்கிறார்களே தவிர, திமுக தலைமை முறைப்படி எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் பாமகவை உள்ளே கொண்டு வருவது பற்றின பேச்சினை கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஆரம்பித்தார்.

    துரைமுருகன்

    துரைமுருகன்

    தன் மகன் கதிர் ஆனந்தை வேலூர் தொகுதியில் நிற்க வைக்க நீண்ட கால திட்டத்தில் இருக்கிறார் துரைமுருகன். ஆனால் பாமக எதிர்தரப்பில் போட்டியிட்டால் அது தன் மகனின் வெற்றிக்கு தடையாக இருக்கும் என்று நினைத்துதான், பாமகவை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    வட மாவட்டங்கள்

    வட மாவட்டங்கள்

    இது ஒருபுறம் காரணமாக எடுத்து கொண்டாலும், பாமக தற்போது வடமாவட்டங்களில் வலிமையான கட்சியாக உருவாகி உள்ளது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பாமக முன்பை விட பலம் வாய்ந்ததாக இங்கெல்லாம் மாறியுள்ளது. கேட்கும் தொகுதியை கொடுத்துவிட்டால், வட மாவட்டங்களை பற்றி திமுக கவலைப்படாமலும் இருந்திருக்கலாம்.

    சீரியஸாக எடுக்கவில்லை

    சீரியஸாக எடுக்கவில்லை

    பாமக வேண்டவே வேண்டாம் என்று ஆ.ராசா, முதல்கொண்டு எல்லோருமே சொல்லி வந்தாலும், அரசியல் லாபத்தை பற்றி சீனியர் துரைமுருகன் சிந்திக்கவே செய்தார். இதற்காக விசிகவை இழக்கவும் ஒரு கட்டத்தில் துணிந்தார். ஆனால் துரைமுருகனின் பேச்சை ஸ்டாலின் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். அவர் பரிசீலனை செய்திருக்கலாமோ என்றே சொல்ல தோன்றுகிறது.

    கருணாநிதி

    கருணாநிதி

    வலுவான கூட்டணி என்பது இந்த நேரத்தில் மிக முக்கியம். பாமக யாருடன் சேருகிறதோ அந்த கூட்டணி வலுவானதாக கருதப்படும் சூழல் இன்றைக்கு தமிழகத்தில் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் போதெல்லாம் கருணாநிதி மிக எளிதாக சமாளித்து தன் கட்சிக்கு எது தேவையோ அதை செய்து பலம் வாய்ந்ததாக மாற்றத் தவற மாட்டார். விஜயகாந்த்தையே கூட்டணிக்கு கூப்பிட்ட சாணக்கியர் கருணாநிதி

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    பாமக கூட்டணியும் என்றைக்கோ திமுகவில் இணைந்து பலமான கூட்டணியாக விஸ்வரூபமெடுத்திருக்கும். ஆனால் இதை ஸ்டாலின் பயன்படுத்தி கொள்ளவில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக அன்புமணி தன் அப்பாவையே மீறி திமுகவுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருந்தார். ஆனால் அதையும் ஸ்டாலின் யோசிக்கவில்லை.

    7+1 சீட்

    7+1 சீட்

    இப்போது துண்டு போட்டு பேசி 7+1 சீட் பாமக வாங்கி கொண்டு அதிமுகவை பலம் வாய்ந்த கூட்டணியாக மாற்றி கொண்டிருக்கிறது. கமல் விஷயத்தில்தான் ஸ்டாலின் அவசரப்பட்டு விட்டார் என்றால், பாமக விஷயத்திலும் கோட்டை விட்டது திமுகவுக்கு பெரிய மைனஸ்தான்!

    English summary
    If the coalition with the PMK would have been strong enough for the DMK. But it is said that MK Stalin missed that opportunity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X