மெகா தடுப்பூசி முகாம்..அமைச்சர் மா.சு.வுக்கு பிடித்த சொல்லை பயன்படுத்தி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மாரத்தான் வேகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செயல்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை ஓய்ந்தாலும் அலைகள் ஓய்வதில்லை என்பதை போல 3 ஆவது அலை தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் 3 ஆவது அலையை எதிர்கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு என்றதால் மக்களுக்கு தடுப்பூசி போட அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

20 லட்சம் தடுப்பூசிகள்
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் அதிகமாக தடுப்பூசிகளை செலுத்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

சுகாதாரத் துறை
நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதையடுத்து சுகாதாரத் துறையையும் தமிழக அரசையும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் #COVID19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

நன்றி தெரிவித்த முதல்வர்
இன்று (நேற்று) 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை! மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர்
@Subramanian_ma அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி!

தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிலும் நம்பத்தகுந்தவர்களிலும் முக்கியமானவர் மா சுப்பிரமணியன்.

யோகா, உடற்பயிற்சி
இவர் மாரத்தான் போட்டிகளில் ஓடி இளைஞர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து தனது உடலையும் ஃபிட்டாக வைத்து கொள்கிறார். எத்தனை முக்கிய விஷயமாக இருந்தாலும் காலையில் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி செய்வதை அவர் தவறுவதில்லை. அண்மையில் 37 நாடுகளைச் சேர்ந்தவர்களை வைத்து மாரத்தான் நடத்தி அதன் மூலம் வசூலான ரூ 56 லட்சத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொரோனா நிதியாக ஒப்படைத்தவர் மா சுப்பிரமணியன்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications