திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல்.. திமுக ஆட்சி உதயமாகும்! சீர்கெட்ட ஆட்சிக்கு முடிவு.. ஸ்டாலின் உறுதி!
சென்னை: சென்னையில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," திருச்சி கிழக்கில் இடைத்தோ்தல் வரப்போகிறது; தமிழ்நாட்டில் 6 மாதமாக ஆட்சி நடக்கவில்லை காட்சிதான் நடக்கிறது எனவும், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமையத்தான் போகிறது, யாருக்கும் கவலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
சென்னையில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா ஆகியோரை வாழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் " திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மாநாட்டை நடத்திக் காட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர் கே.என்.நேரு. மாநாடு என்றால்.கே.என்.நேரு; கே.என்.நேரு என்றால் மாநாடு.
தனது உழைப்பிற்கு அடையாளமாகப் பல பணிகளைச் செய்திருக்கிறார். 40 ஆண்டுகளாகக் கழகத்திற்காக உழைத்திருக்கிறார். கோபக்காரர், வேகமாகப் பேசுவார் என்பது உண்மை. ஆனால், அவரது கோபத்தில் அன்பும் பாசமும் இருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞரையும், கே.என்.நேருவையும் பிரிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்ததைப் போல, என்னையும் நேருவையும் பிரிக்க முடியாது என்று பெருமையுடன் சொல்வேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு கழக நிலைத்திருக்குமா, கட்சி தொடருமா எனக் கனவு கண்டவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, கழகம் வெற்றி நடைபோடுகிறது என்றால், அதற்கு தனிப்பட்ட மு.க.ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல; கே.என்.நேரு போன்றவர்களும் காரணம்.
இன்றைக்கும் அவரது மாவட்டத்தில் கே.என்.நேருதான் அமைச்சராக இருக்கிறார் என்கிறார்கள். அதேபோல், என்னையும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் கே.என்.நேருதான் அமைச்சராக இருக்கிறார், நான்தான் முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.
அந்த அளவிற்கு த.வெ.க ஆட்சி மோசமாக உள்ளது. இப்போதும் நான் முதலமைச்சர் என்று இனி சொல்லாதீர்கள். இந்தச் சீர்கெட்ட ஆட்சி முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்; திமுக ஆட்சி உதயமாகும். விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட்டு, சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
