மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!
சென்னை: இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் மக்களை தயாராக இருக்க சொல்லும் முன்.. அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," Preparedness cannot be outsourced to the people. Prepared for what - leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே... தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?

#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும். மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் - எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன்.
In view of the ongoing #WestAsiaWar, I have written to Hon’ble @PMOIndia on urgent issues affecting Tamil Nadu and our people abroad.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 11, 2026
⛽ LPG supply disruption: Urged immediate steps to ensure uninterrupted LPG supply for domestic, commercial, and industrial consumers in Tamil… pic.twitter.com/aFbw0oqvGR
12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய… https://t.co/N9f4XCVnXH
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 12, 2026
14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம்.
#WestAsiaWar காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 14, 2026
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?#LPGCylinder pic.twitter.com/gxiHrdnhHs
அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை.
15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, "மக்கள் தயாராக இருக்க வேண்டும்" என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: "எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?" என கூறியுள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிவப்பு ஓகே.. ஆனா நீலம், மஞ்சள் சிலிண்டர் எதுக்கு? மக்கள் அறிய வேண்டிய எல்பிஜி ரகசிய நிற குறியீடுகள் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?














Click it and Unblock the Notifications