தமிழகத்தில் வெற்றிடமா?.. நான் இருக்கிறேன்.. ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் திடீர் பதிலடி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது என ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென பதிலடிக் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் பார்வை குறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை.
தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே.

நிரூபித்து
எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றிபெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்ஜிஆர்தான் நிரூபித்துக் காட்டியது.

முக்கியம்
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர்தான் ரோல்மாடல். தமிழ்நாட்டில் தற்போது நல்ல தலைமை இல்லை. பெரிய அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதுதான் இப்போது முக்கியம்.

பேட்டியில்
மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்
ரஜினியின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

வெற்றிடம்
அவர் பேசுகையில் ஸ்டாலின் கனவு காண்கிறார் என என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் மக்கள் அவர்களின் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள். இன்னும் சிலர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்கள்.

ரஜினிக்கு ஸ்டாலின் பதிலடி
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது. கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன் என்று ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் பதிலடி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
