பாஜகவின் “சீக்ரெட் பிளான்”.. சல்லி சல்லியாக நொறுக்கிய ஸ்டாலின்! அமித்ஷா சென்னை வருவது இதுக்குதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு செய்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் சரிவடைந்துகொண்டே வருகிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும் எப்போதும் எடுப்பார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் மீண்டும் சந்தித்தால் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன் வரலாம். முழுமையாக தேய்ந்து போவதற்கு முன் அவர்கள் தேர்தலை நடத்த முயலலாம். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

2 நாட்களாக பத்திரிகைகளில் செய்தி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகிறார் என்று. பாஜகவினுடைய பொதுக்குழு கூட்டத்தில் பேச இருக்கிறார் என்று வந்துகொண்டு இருக்கிறது. என்ன காரணம்? நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர்கள் தயாராவதை காட்டுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா அவர்கள், கடந்த 9 ஆண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் பேசப்போகிறீர்கள். பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க போகிறீர்கள். செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளீர்கள்.

MK Stalin revealed the secret plan of BJP regarding Amit Shah Chennai visit about 2024 Lok sabha election

இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்வதற்கு அமித்ஷா தயாராக இருக்கிறாரா? இந்த கேள்வியைதான் நான் கேட்கிறேன். இதே திராவிட முன்னேற்றக் கழகம் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் இருந்தது.

அப்போது ஏராளமான சிறப்பு திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையை உருவாக்கி வருகிறேன். இந்த மண்ணில் இனி திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்தவே முடியாது" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+