பாஜக பொருளை எடுத்து அவங்களையே போட்ட ஸ்டாலின்! ஸ்மெல் பண்ணக் கூட முடியலை! குஷியான கூட்டணி கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ஒரே ஒரு மெசேஜ்-ல் ஒட்டுமொத்தமாக தமிழக அரசியலை தனது பக்கம் திருப்பி இருக்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். தேர்தல் வருவதால் மகளிர் தொகையை முடக்க சிலர் முயற்சிக்கலாம் என்பதை கண்டுபிடித்த திமுக தரப்பு நேற்று காலையில் அரசு சார்பில் மூன்று மாத மகளிர் உரிமை தொகையோடு கோடைகால ஊக்கத்தொகை என ஐந்தாயிரம் ரூபாயை வரவு வைத்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன.

திமுக ஆட்சியில் நேற்றைய விடியல் மிகச் சிறப்பாக இருந்தது. அதிகாலை முதலே ஒன்றரை கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கி கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. யார் அனுப்பி இருக்கிறார்கள் என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மகளிர் உரிமைத்தொகை தான் உங்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

Magalir urimai thogai mk stalin Tamil Nadu Assembly Election 2026

மகளிர் உரிமை தொகை 5000

சிறிது நேரத்திலேயே அந்த வீடியோ வைரலாக அனைத்து தொலைக்காட்சிகளும் அது தொடர்பாக விவாதம் நடத்த தொடங்கின. எதிர்பார்த்தது போலவே பாஜக, அதிமுக உள்ள கட்சிகள் தேர்தலுக்கான ஏற்பாடு இது என விமர்சித்தன. சேலம் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூட எனக்கு பயந்து தான் முதலமைச்சர் ஐயாயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறார் என்றார். எது எப்படி இருந்தாலும் 5000 ரூபாய் மகளின் உரிமை தொகை மூலம் கட்சி பேதாமின்றி ஒட்டுமொத்தமாக மகளிர் ஆதரவை ஒரே காலையில் பெற்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

மு.க.ஸ்டாலின் நலத்திட்டம்

இது ஒரு புறம் இருக்க மகளின் உரிமை தொகையால் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் உற்சாகம் அடைந்திருக்கின்றன. அரசு ஊழியர்கள் போராட்டம், சட்டம் ஒழுங்கு, மது விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு பிரச்சனைகளை பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பி வந்த நிலையில் இதுவரை பேச முடியாத சூழலில் கூட்டணி கட்சிகள் இருந்தன. குறிப்பாக தொழிலாளர்கள் போராட்டங்கள் அரசு ஊழியர்கள் போராட்டங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்வது என தெரியாமல் விழித்து வந்தன.

பெண்கள் நிதி உதவி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூடுதல் தொகுதிகள் என காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பேசிய நிலையில் ஒரே ஒரு அறிவிப்பில் பல மாங்காய்களை அடித்து தூக்கி இருக்கிறார் ஸ்டாலின். ஆட்சிக்கு எதிரான மனநிலை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சுக்களை மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தி உடைத்திருக்கிறார். இதுவரை திமுகவை லேசாக விமர்சித்து வந்த பாஜக தங்கள் திட்டத்தை எடுத்து (அதாவது பீகார் தேர்தலையொட்டி மகளுக்கு ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது) தங்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதால் அதிர்ச்சியில் உள்ளது.

திமுக கூட்டணி உற்சாகம்

ஆட்சியில் இல்லாததால் எதுவும் செய்ய முடியாத நிலையில் எடப்பாடி உள்ளார். பெண்கள் வாக்கு கிடைக்கும் என நம்பி இருந்த விஜயையும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கூட்டணி கட்சிகளையும் இந்த அறிவிப்பு குஷிப்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் செல்லும் பகுதிகளில் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இதை வைத்தே ஆட்சிக்கு எதிரான மனதிலேயே சமாளித்து விடலாம். சொல்லாமலேயே 5000 கொடுத்த ஸ்டாலின் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மகளிர் தொகையை இரட்டிப்பாக்கி தருவார் எனக் கூறிய வாக்குகளை பெற்று விடலாம் என மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் திமுகவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதனால் வரும் தேர்தலில் திமுக செல்வதை தான் கேட்க வேண்டும், கூடுதல் தொகுதிகளை கேட்கக்கூடாது என கூட்டணி கட்சிகளை சமாளித்து விடலாம் என்பதால் திமுகவும் மகிழ்ச்சியில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+