உலக அளவில் ட்ரெண்ட் ஆன முதல்வர் ஸ்டாலின்... #HBDMKStalin70..ட்விட்டரில் கெத்து காட்டும் திமுக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் உலக அளவில் அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது திமுக ஐடி விங் செயல்பாட்டில் புதிய மைல் கல் ஆகும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

70வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
மேலும், தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பாஜக மாநில அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுபோன்று பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் ட்விட்டரில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் டிரண்டிங்கில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. திமுக தகவல் தொழில் நுட்பத்துறை அணி வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக கருத்தப்படுகிறது.
மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் இன்றைய தினம் திருவிழா கோலம் பூண்டது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பரிசுகளை அளித்தனர். அவர்களுக்கு பதிலுக்கு மரக்கன்றுகளை பரிசளித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விருந்துகள், நலத்திட்ட உதவிகள் களைகட்டின.
முதல்வர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக விமரிசையாக கொண்டாட திமுக தலைமைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். விழாவில் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துவார். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications