நாளை முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வண்டி வண்டியாக சென்னைக்கு படையெடுக்கும் திமுகவினர்!
70வது வயதில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் சாரை சாரையாக சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
நாளைய தினம் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திமுக தொண்டர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெறவிருக்கிறார்.
இதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது திமுக தலைமைக் கழகம். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பொறுப்பை டி.ஆர்.பாலு ஏற்று அதை செய்தும் முடித்திருக்கிறார்.

குவியும் திமுகவினர்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் நாளை முழுவதும் தனக்கு வாழ்த்துச் சொல்ல வருபவர்களை சந்திக்கவிருப்பதால், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னைக்கு இன்றே புறப்பட்டு விட்டனர். கட்சியினரை பொறுத்தவரை ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியாகவும், திருவிழாவை போலவும் கருதுவதால் அதை தவறவிட்டுக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர்.

வீட்டில் விஐபிக்கள்
முதலமைச்சர் ஸ்டாலினை அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய விஐபிக்கள் மட்டுமே நாளை வீட்டில் சந்தித்து வாழ்த்துக் கூற முடியும். மற்றபடி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் தான் வாழ்த்துக் கூற முடியும். அந்த வகையில் தான் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் நாளை மதியம் முதல்வர் வீட்டில் விருந்து தரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுக்கூட்டத்துக்கு கூட்டம்
நாளை மாலை நடைபெறும் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்கும் பொறுப்பை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications