மு.க ஸ்டாலின் பிறந்தநாள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை - கனிமொழி,தயாநிதி மாறன் வாழ்த்து

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கனிமொழி எம்பி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது. மு.க. ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

MK Stalins birthday tribute at Anna and Karunanidhi memorials

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று துரைமுருகன் வாழ்த்து கூறினார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் கருணாநிதியின் நினைவிடம், பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

MK Stalins birthday tribute at Anna and Karunanidhi memorials

முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் பிறந்தநாளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இன்றைய நாளில், திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட உள்ளார்.

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

MK Stalins birthday tribute at Anna and Karunanidhi memorials

தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!. அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்றும் பதிவிட்டுள்ளார்.

MK Stalins birthday tribute at Anna and Karunanidhi memorials

இதே போல தயாநிதி மாறன் எம்பி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!. இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+