விஜய்யை விடுங்க.. கான்வாய் படை சூழ காலையில் வழக்கம்போல வாக்கிங் போன ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசியலில் தற்போது கான்வாய் அரசியல் புதிய விவாதத்தை உருவாக்கி வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை கான்வாய் பாதுகாப்பு நேற்று இரவு திரும்ப பெறப்பட்ட நிலையில், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்ஆர்சி நகரில் உள்ள தொல்காப்பியர் பூங்காவிற்கு நடைபயிற்சிகாக கான்வாய் பாதுகாப்புடன் இன்று காலை வந்ததார்
சென்னை எம்ஆர்சி நகரில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் கான்வாய் அணிவகுப்பும் வந்திருந்தது.

வழக்கமாக முதலமைச்சர், முக்கிய தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது இயல்பான விஷயம். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த நிகழ்வு தனிப்பட்ட கவனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட பிறகு, ஸ்டாலினின் இந்த கான்வாய் பயணம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் ஏன் திரும்ப பெறப்பட்டது?
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்க்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், முதலமைச்சருக்கு வழங்கப்படும் வகையிலான கான்வாய் பாதுகாப்பு வாகனங்களும் தற்காலிகமாக வழங்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக விஜய் பல்வேறு இடங்களுக்கு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று வந்தார். ஆனால் பின்னர் அந்த கான்வாய் வாகனங்கள் அனைத்தும் காவல்துறையால் திரும்ப பெறப்பட்டன. இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் வெளியாகிய தகவலின்படி, தனிப்பெரும்பான்மை நிரூபித்து அதிகாரப்பூர்வமாக முதலமைச்சராக பதவியேற்ற பிறகே முழுமையான பாதுகாப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கான்வாய் பாதுகாப்பு தேவையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபுறம் விஜய் கான்வாய் பாதுகாப்பை தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகும் நிலையில், மறுபுறம் ஸ்டாலின் நடைபயிற்சிக்கே கான்வாய் பாதுகாப்புடன் சென்றது சமூக வலைதளங்களில் சரியான புரிதல் இல்லாமல் இதுக்குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் அரசின் நிரந்தர பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்றன என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர். குறிப்பாக இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற தலைவர்களின் பயணம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாகும்.
இதனால் ஸ்டாலின்-க்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுக்காப்பு என்பது இயல்பான விஷயம்.


Click it and Unblock the Notifications
