தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு திமுக துணை நிற்கும்... இமானுவேல் சேகரனாருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவுநாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேலும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, "தேவேந்திரகுல வேளாளர்" என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற திமுக வலியுறுத்தும் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உரிமைப் போராளி

உரிமைப் போராளி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டுப் புகழஞ்சலி செலுத்தினேன். "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு- தனது 18-வது வயதில் கைதாகி- தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர் அவர். தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கல்வி - அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்.

சமூக நீதி களம்

சமூக நீதி களம்

இமானுவேல் சேகரனாருக்கு 2010-ல் கழகம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த நேரத்திலும்- மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்திலும்தான் தபால் தலை வெளியிடப்பட்டது. சமூகநீதிக் களத்திலும், நாட்டின் விடுதலைக் களத்திலும் நாடிச் சென்று பெரும்பங்காற்றிய அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் - அந்த உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாளாகவே அமைந்துள்ளது.

திமுக வலியுறுத்தும்

திமுக வலியுறுத்தும்

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, "தேவேந்திரகுல வேளாளர்" என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்று திரு. இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம். "இந்த கோரிக்கையை உரிய முறையில் பரிசீலனை செய்து, அதற்குத் தக்கதொரு தீர்வினை விரைவில் கண்டிட வேண்டும் என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் - மத்திய அரசையும் தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும்" என்ற உறுதியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புகழஞ்சலி

புகழஞ்சலி

இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் இதுவரை அமைதி காக்கிறது. ஆகவே இக்கோரிக்கையை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன். திரு. இமானுவேல் சேகரனாரின் புகழ் என்றும் நிலைத்தோங்கி நீடுழி வாழ்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+