ஸ்டாலின் சொல்லாமல் செய்த விஷயம்.. நடந்த மாஸ் சம்பவம்.. நான் முதல்வன் திட்டத்தில் இத்தனை நன்மைகளா?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லாத ஒரு விஷயம், ஆனால் ஆட்சிக்கு வந்த பின் திடீரென கொண்டுவரப்பட்ட மாஸ் திட்டம் என்றால் அது நான் முதல்வன் திட்டம். இளைஞர்கள் வேலைவாய்ப்பு திறன்களை பெறுவதற்காக திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படுகிறது.
இதனால் என்ன நன்மை நடக்கிறது என்பதற்கு நேற்று வேலைவாய்ப்பு பெற்ற 1,425 பட்டதாரிகளே சாட்சி. நேற்று இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன? தமிழக முதல்வரின் கனவுத் திட்டம் தான் 'நான் முதல்வன்' திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படுகிறது. இதற்கான கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதல் குழுவும் இயங்கி வருகிறது. "தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் நான் முதல்வன் " திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நான் முதல்வன்" திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்காக இணையதளமும் இயங்குகிறது. இதில் தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சில பயிற்சிகள் குறைவான கட்டணத்துடனும் வழங்கப்டுகிறது.
பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் "நான் முதல்வன்" இணையதளத்தின் மூலம் பெறலாம்.
https://naanmudhalvan.tnschools.gov.in/home என்ற இணையதளத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால், கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி, வேலைவாய்ப்புகள் என விஷயங்களுக்கு வழிகாட்டுகிறது அரசு. மிகப்பெரிய தனியார் ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகளையும் அரசு நடத்துகிறது. விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெறலாம். நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கடன், கல்லூரிகள், படிப்புகள், பயிற்சி வகுப்புகள் என எல்லா தகவலும் தரப்படுகிறது.
இந்த தளத்தின் மூலம் திறன் பயிற்சிபெற்ற 1,425 கலை-அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடந்தது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், "மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப் பிரிவுகளில் பயிற்சி வழங்கி, தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 64,943 பொறியியல் மாணவர்களும், 78,196 கலை, அறிவியல் மாணவர்களும் பணிவாய்ப்பு பெற்றுள்ளார்கள். இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் ஜூன் மாத இறுதி வரை நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், செயின்ட் கோபைன், மைக்ரோசாஃப்ட், சதர்லேண்ட், மிஸ்டர் கூப்பர், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications