மிஷன் 2021-ஐ போல் மிஷன் 200.. ஸ்டாலின் கூறிய மிஷன் என்ன?
சென்னை: மிஷன் 2021-ஐ போல் மிஷன் 200 என வைத்துக் கொள்வோம். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதே மிஷன் 200 ஆகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பிரச்சார பயணம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாவட்டச் செயலாளர்களும் கழக நிர்வாகிகளும் உங்கள் சக்தியை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆட்சி அமைக்க 117 இடங்களில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் 117 இடங்களுக்காக நாம் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை.

30 அமைச்சர்கள்
117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. ஒரு 30 அமைச்சர்களை பெறுவதற்காகவும் நாம் கட்சி நடத்தவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வென்றோம். அதுதான் உண்மையான வெற்றி. அத்தகைய வெற்றியை முழுமையாக பெற அனைவரும் முழுமுயற்சி எடுக்க வேண்டும்.

வெற்றி
திமுக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பார்க்காதீர்கள். உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர் என்பதை மனதில் நிறுத்துங்கள். திமுக ஆட்சி மலர வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என நினைக்காதீர். திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என கருதுங்கள்.

ஓசை வராது
ஒரு கை தட்டினால் ஓசை வராது. தனிமரம் எப்போதும் தோப்பாகாது. ஒரு நபர் குடும்பமாக முடியாது. 5 முறை தமிழகத்தை ஆண்டோம், 6ஆவது முறையும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். 10 ஆண்டுகளாக தொகுதி பக்கமே அதிமுகவினர் செல்லவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகத்தை அதிமுக அரசு சந்தி சிரிக்க வைத்துவிட்டது.

குறை கேளுங்கள்
கிராம சபை பிரச்சாரம் முடிந்தவுடன் நானே ஒவ்வொரு கிராமமாக செல்வேன். ஊராட்சி சபை கூட்டம் பயன்பட்டது போல் கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும். அதிமுகவை நிராகரிக்க வேண்டும் என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்க வேண்டும். டிச. 23 முதல் மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள்.

அரவணைக்க
கிராமங்களில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். சாலை வசதி, மருத்துவ வசதி, ரேஷன் கடைகள் இல்லை என கிராம மக்கள் சொல்வார்கள். கிராம மக்கள் சொல்லும் கோரிக்கைகளை பொறுமையாக கேளுங்கள். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள். எல்லோரையும் அரவணைக்க கற்றுக் கொள்ளுங்கள்.

மிஷன் 200
வேட்பாளர்கள், தொகுதி குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். அவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளர். சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். மிஷன் 2021 ஐ போல மிஷன் 200 என வைத்துக் கொள்வோம் என்றார் ஸ்டாலின்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications