தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்தவருக்கு இவ்வளவு ஆணவமா..? உணர்வுடன் விளையாட வேண்டாம் -மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம் என்றும் சிறு பொறி தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை இந்தி தெரியாததால் கடன் கிடையாது எனக் கூறி ஐ.ஓ.பி. வங்கி அதிகாரியால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதனிடையே மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;
''ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, 'இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது' என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி!
இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?
எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!'' இவ்வாறு ஸ்டாலின் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
இதனிடையே இது தொடர்பான செய்தியின் முழு விவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்;
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications