சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Mr.எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திகங்க... உண்ணாவிரதப் போராட்ட நிறைவுரையில் ஸ்டாலின் ஆவேசம்..!

Google Oneindia Tamil News

சென்னை: தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்றும் விவசாயிகளுக்காக அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி தனது பொய்யை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கடுகடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் உரையில் வழக்கத்தை விட இன்று காட்டம் சற்று அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு.. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவதா - ஸ்டாலின் பொளேர்விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு.. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவதா - ஸ்டாலின் பொளேர்

9 மணி நேரம்

9 மணி நேரம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. போராட்டத்தின் நிறைவாக உரையாற்றிய ஸ்டாலின் முதலமைச்சர் மீது சீறினார்.

ஸ்டாலின் விமர்சனம்

ஸ்டாலின் விமர்சனம்

காலை ஒரு அறிக்கை மதியம் ஒரு அறிக்கை இரவு ஒரு அறிக்கை என தாம் விட்டுக்கொண்டிருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார் என்றும் அறிக்கை விடாமல் எதிர்க்கட்சித் தலைவர் என்ன அவியலா செய்வார் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நானும் ரவுடி நானும் ரவுடி என்பதை போல் நானும் விவசாயி நானும் விவசாயி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களிலெல்லாம் பேசிவருவதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆவேசம்

ஸ்டாலின் ஆவேசம்

கருணாநிதி முதல்முறையாக தனது சட்டமன்ற கன்னிப்பேச்சின் போது குளித்தலை நங்கவரம் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியவர் என்றும் அப்பேற்வட்டவர் மகன் தாம் என்றும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இப்படி உரையாற்றிக்கொண்டே இருந்த போது திடீரென ஆவேசமடைந்த அவர், Mr.எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திகங்க என எச்சரிக்கை விடுத்தார். மேலும், எல்லாம்நான்கு மாதங்கள் தான் எனச் சுட்டிக்காட்டினார்.

போராட்டம் நிறைவு

போராட்டம் நிறைவு

இதனிடையே மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றிய பிறகு வாழ்த்துரை வழங்கிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்த ஸ்டாலின், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், தங்கபாலு, ஜவாஹிருல்லா, உள்ளிட்டோருக்கு பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

English summary
Mk stalin says,Mr. Edappadi Palanisamy stop with this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X