சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க ஹோட்டலில் ரகசியமாக பேசலை.. வெளிப்படையாக பேசி அறிவித்தோம்.. ஸ்டாலின் பொளேர்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

    சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 மக்களவை தொகுதியும், புதுவையில் தொகுதியும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து கட்சி நிர்வாகதிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை நடத்தியது.

    அதுபோல் கிண்டியில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    சிறிது நேரம் ஆலோசனைக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். முன்னதாக திமுக -காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    10 தொகுதிகள்

    10 தொகுதிகள்

    திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையும் சேர்த்து மொத்த 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    அழைத்து பேசுவோம்

    அழைத்து பேசுவோம்

    எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து மற்ற கட்சிகளுடன் பேசி முடிவு செய்ய வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக தோழமை கட்சிகளாக உள்ளவர்களையும் அழைத்து பேசவுள்ளோம்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றார் ஸ்டாலின். ராமதாஸை கடுமையாக விமர்சனம் செய்தது ஏன் என்பதையும் ஸ்டாலின் விளக்கினார்.

    English summary
    MK Stalin says that 10 Loksabha constituencies are allotted to Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X