Stalin: சிஎம் சார் பயமா? ஜெயிச்சாலும், தோற்றாலும்... மதுராந்தகத்தில் தொடையை தட்டிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயிச்சாலும் தோற்றாலும் கெத்தா திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு களத்தில் மக்களுக்காக பாடுபடுவோம், மக்கள் கூட இருப்போம், களத்தில் நிற்பவர்கள் நாங்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடையை தட்டி தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, மதுராந்தகம் புறவழிச்சாலையில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை.

maduranthagam

உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல். 4 மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள். மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேறு சின்னத்தில் வாக்கு கேட்கிறார்கள்.

5 ஆண்டுகள்

அதுவும் 5 ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்ற அவரை வைத்துக் கொண்டே சொல்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதை சொல்லிவிட்டு அவருக்கே வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா? தமிழகத்தில் ரிசல்ட் வந்த கையோடு ஒரு எம்எல்ஏ ராஜினாமா பண்ணுவது இதற்கு முன்பு நடந்திருக்கிறதா? இது அப்பட்டமான குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது.

விலைக்கு வாங்கி..

ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல் அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மறுபடியும் அவர்களையே நிற்க வைத்து தவெகவின் சீட் கணக்கை கூட்டப் பார்க்கிறார். உறுதியாக சொல்கிறேன். பல குதிரை பேரங்கள் நடந்திருக்கின்றன.

உதயசூரியன் சின்னம்

சில நாட்களுக்கு முன்பு கூட உதயசூரியன் சின்னத்தில் களம் கண்ட இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு வந்தால் அமைச்சராகியிருக்கலாம் என ஒரு அமைச்சரே கூச்சமில்லாமல் மேடையில் பேசியுள்ளார்.

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது. இதுதான் தூய சக்தியின் ஆட்சியா? இல்லை இது துயர சக்தி. நேற்று கூட முதல்வர் இங்கே ஷூட்டிங் எடுக்க வந்தார், அப்போது ஒரு சீனில் டீ குடிக்கிற ஷாட், அந்த டீயை குடித்துவிட்டு பந்தாவாக ரூ 500 கொடுக்கிறார்.

டீ விலை தெரியுமா சிஎம்

ஆனால் மக்கள் ஒரு டீக்கு எவ்வளவு காசு கொடுக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியுமா? இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு டீ ரூ 10, இப்போது ரூ 15. மளிகைக் கடையில் விலைவாசி பற்றி போய் கேளுங்கள் சி.எம்.சார். அரிசி, சர்க்கரை, காய்கறி உள்பட எல்லா விலையும் ஏறிவிட்டது. அடிக்கடி பேசினார்களே 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடிப் போய்விடும் என்று!

குட்டிக்கரணம்

இன்று ஒரு தொகுதியில் வாக்கு வாங்க குட்டிக்கரணம் அடிக்கிறார். மதுராந்தகம் மக்கள் படுதோல்வியை பரிசாகத் தர வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். இந்த ரீல்ஸ் வெறியர்களுக்கு ஒரு ரியாலிட்டி செக் கொடுக்க வேண்டும். நீங்கள் மட்டும்தான் இது மக்களாட்சி என்று சொல்கிறீர்கள். உண்மையில் இது மர்மமான ஆட்சி. யாரோ ஒருத்தரின் கன்ட்ரோலில் யாருடைய நன்மைக்கோ இங்கே கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது.

ஏமாற்றம்

எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை, எல்லாம் திரைமறைவில் நடக்கிறது. மக்கள் இனிமேலாவது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள். மாற்றம் என்று சொன்னதை நம்பினீர்கள். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். தமிழ்நாடே உங்கள் தீர்ப்புக்குத்தான் வெயிட்டிங், நீங்கள் கொடுக்கிற தண்டனையில்தான் இனி மற்ற தொகுதிகளில் குதிரை பேரம் நடக்குமா, நடக்காதா என்று முடிவாகும். இதை மதுராந்தகம் மக்கள் மறந்துவிட வேண்டாம். ஜெயிச்சாலும் தோற்றாலும் கெத்தா திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு களத்தில் மக்களுக்காக பாடுபடுவோம், மக்கள் கூட இருப்போம், களத்தில் நிற்பவர்கள் நாங்கள் என தொடையை தட்டி ஸ்டாலின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+