நீங்க எப்போ வேணா சென்னை வரலாம்.. ஸ்வீட் பாக்ஸ் பெண்டிங்ல இருக்கு! வாஞ்சையோடு ராகுலை அழைத்த ஸ்டாலின்
சென்னை: சென்னையில் எப்போது சைக்கிள் ஓட்டலாம் என அழைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வரலாம் எனவும், ஒன்றாக சென்னையை சுற்றுவோம், பின்னர் தென்னிந்திய மதிய உணவை சுவைப்போம் என பதிலளித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27ஆம் தேதி அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28ஆம் தேதி சென்றடைந்தார். இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை, "மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும்" எஜ தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி, "சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்" என கேட்டிருந்தார்.
அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வாருங்கள், நம் இருவரும் ஒன்றாக சவாரி செய்து சென்னையின் இதயத்தை ஆராய்வோம்.. நான் உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது. நாம் சைக்கிள் சவாரி செய்த பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சுவைப்போம்" என கூறியுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலின் போது ஏப்ரல் மாதம் கோவை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட ராகுல் காந்தி வழியில் சிங்காநல்லூர் பகுதியில் திடீரென காரை நிறுத்தினார். இதனால் அவரது பாதுகாவலர்களும் பொதுமக்களும் திடீர் பரபரப்பு அடைந்த நிலையில் காரை விட்டு இறங்கிய ராகுல் சென்டர் மீடியனை தாண்டி குதித்து அருகில் இருந்த இனிப்பு கடைக்குள் சென்றார். இதை பார்த்ததும் கடையில் இருந்த பணியாளர்களும் கடை உரிமையாளரும் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்களோடு வெகு சகஜமாக பழகிய அவர் கடையில் சில இனிப்புகளை வாங்கி ருசி பார்த்தார். பின்பு அங்கிருந்த ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அவர் அங்கிருந்து நிகழ்ச்சி நடந்த பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார்.
கடையில் இருந்த போது எனது அண்ணன் ஸ்டாலினுக்கு எனக்கூறி இனிப்புகள் சிலவற்றையும் ராகுல் காந்தி வாங்கி இருந்தார். பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்குச் சென்ற ராகுல் காந்தி தான் வாங்கிய இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்துக்களை கூறினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் ஸ்டாலினும் எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க என மகிழ்ச்சியுடன் கூறி அதனை பெற்றுக் கொண்டார். அதைக் குறிப்பிட்டுதான் தான் தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் நிலுவையில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது











Click it and Unblock the Notifications