ஒரே நாளில் டபுள் ஸ்கோர் செய்த ஸ்டாலின்.. பாண்டே சொன்ன பிரம்மாஸ்திரம் என்ன?
சென்னை: ரூ. 5000 மகளிர் உரிமை தொகை வழங்கிய கையோடு, அன்று மாலையே பாஜக தேசிய செயற்குழு உறுப்பிர் ஹெச் ராஜாவை மருத்துவமனையில் போய் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். வெறும் 10 பேருக்கு மட்டுமே ஸ்டாலின் 5000 பணம் வழங்க போகும் விஷயம் தெரியுமாம். யாருக்குமே தெரியாமல் ரகசியமாக செய்து முடித்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் ஹெச் ராஜாவை சந்தித்துள்ளார். ஒரே நாளில் டபுள் ஸ்கோர் செய்திருப்பதாக திமுகவினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
அரசியல் என்பது பொதுவாக மக்கள் நலன் சார்ந்த பணி என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் என்பதை எல்லாம் தாண்டி, சாணக்கியராக இருப்பதே முக்கியம் என்பதாக மாறிவிட்டது. எதிரே உள்ளவர்களை தடுப்பாட்டம் ஆட வைத்துவிட்டு, பிரச்சனைகளை பேசவிடாமல், அடுத்தடுத்து அதிரடி வியூகங்களை அவிழ்த்துவிடுவது தான் இன்றைய அரசியலாக இருக்கிறது. மூத்த பத்திரிக்கையாளர் பாண்டே ஒரு முறை சொன்னது போல், எல்லா நேரமும் தேர்தல் வியூகத்துடன் இருப்பதுடன் அரசியலாக மாறிவிட்டது.

திமுகவின் அரசியல்
ஆளும் கட்சியான திமுக, இந்த முறை பலமான வியூகத்துடன், அதிமுக பாஜகவிற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது. மறுபுறம் தவெகவை ஹேண்டில் செய்யும் விதமும் அசாத்தியமானதாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் திமுகவின் ஒரே ஆயுதமாக பாஜவையே மாற்றி அவர்களை வைத்தே அரசியல் செய்து இத்தனை அரசியலில் ஜெயித்து வந்துள்ளது.
பாஜக தான் ஆயுதம்
பாஜக தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, மதவாத கட்சி என்று குற்றம்சாட்டி, அதிமுகவை அடிமை கட்சி என்று விமர்சித்து பாஜகவிற்கு எதிராக கடுமையான விஷயங்களை செய்துதான் வெற்றி பெற்றது. பாஜக உடன் சேர்ந்துட்டாங்க பாருங்க என்று கூறியே 2021ல் அதிமுகவை காலி செய்தது. பாஜக உள்ளே வந்துவிடும் என்ற ஒற்றை அரசியல் தான் பாஜகவின் பிரதான அரசியலாக உள்ளது.
திமுகவின் பிராண்டிங்
அதேநேரம் மகளிர் உரிமை தொகை, கலைஞர் வீடு, மகளிர் இலவச பேருந்து, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என்று இந்த ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பிராண்டிங் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளன. மறுபக்கம் விஜய்யின் தவெக தனியாக மோதுகிறது. சீமான் ஒரு பக்கம் தனியாக மோதப்போகிறார். இப்படி நான்கு முனை போட்டி நிலவுவது, ஆளும் கட்சியான திமுகவிற்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
விஜய் தான் சிக்கலே
இதில் விஜய் தனித்து நிற்பது அதிமுக, பாஜகவிற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறுகிறார்கள். ஏனெனில் ஆளும் கட்சி எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதுதான் விஜய்யின் அரசியலாக இருக்கிறது. திமுகவிற்கும் விஜய்யின் வருகை பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவது, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானது இல்லை.
2006 வந்துவிடக்கூடாது
அதேநேரம் 2006ல் நடந்தது போல், நடந்துவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. தவெக பிரிக்க போகும் வாக்குகளே இந்த முறை தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போகிறது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. கடைசியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் திமுக இந்த முறை தேர்தல் அஸ்திரத்தை வீச தொடங்கி உள்ளது. மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சொன்ன பிரம்மாஸ்திரம் இப்போது ஏவப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
5000 பணம் தந்து ட்விஸ்ட்
ஏனெனில் பொதுவாக ஆளும் கட்சி தான் தடுப்பாட்டம் ஆடும்.. எதிர்க்கட்சிகளை தடுப்பாட்டம் ஆட வைப்பதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஒரு பிரச்சனை மாற்றி, இன்னொரு பிரச்சனை என்று அடுத்தடுத்து, அதிமுக, பாஜகவை நிலைகுலைய வைக்க திட்டம் திட்டி செயல்படுத்தி வருகிறது திமுக. அதில் ஒரு அஸ்திரம் தான் நேற்று திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமை தொகை 5000. இது யாருக்குமே தெரியாது. காலையில் வரவு வைத்த பின்னரே அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆளும் கட்சியினருக்கே இது ட்விஸ்டாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், மகளிர் உரிமை தொகை திட்டத்தை பாஜக முடக்க பார்ப்பதாக போகிற போக்கில் குண்டை வீசிவிட்டு போயிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஹெச் ராஜா உடன் சந்திப்பு
அதேநேரம் மகளிர் உரிமை தொகை ஒருபுறம் எனில், பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவை நேரில் போய் சென்று நலம் விசாரித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்ததை திமுகவினரே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஸ்டாலின் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதாக உச்சி குளிருகிறார்கள். உண்மையில் திமுக தேர்தல் பிரம்மாஸ்திரத்தை நேற்று தான் ஆரம்பித்துள்ளது. இனிதான் அடுத்தடுத்து இறங்கி அடிக்கும் என தெரிகிறது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications