பாஜகவுக்கு எதிராக 3-வது அணி கூடவே கூடாது- கேசிஆர், மமதாவை சந்திக்கனும்- ஸ்டாலினுக்கு திருமா அட்வைஸ்
தேசிய அளவில் 3-வது அணி அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் இந்திய அளவில் பயணம் செய்ய வேண்டும் என்கிறார் திருமாவளவன்.
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு வியூம வகுக்கின்றன. காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளைக் கொண்ட 3-வது அணி அமைக்க வேண்டும் என்பதில் சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜி உறுதியாக உள்ளனர்.

இன்னொரு பக்கம் பாஜகவை உறவை துண்டித்துக் கொண்டு பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ்குமார், காங்கிரஸுக்கு பல கேள்விகளை முன்வைத்து வருகிறார். நிதிஷ்குமார் தம்மை ஒரு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார் என்ற விமர்சனமும் உண்டு.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டும். நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான நம்பிக்கை ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தில் தெரிகிறது. இன்று நாட்டில் ஜனநாயகம் கடினமாக சூழலில் உள்ளது. ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் அச்சுறுத்தல் வந்துள்ளது. நாடு தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் மிகமிகப் பழமையான மூத்த அரசியல் கட்சியான காங்கிரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் - என்னை வாழ்த்தியது எனக்குப் பெருமை ஆகும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும். பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது என்றார். அதாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் திமுக இடம்பெறும் என்பதை திட்டவட்டமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆற்றிய உரை வரலாற்றில் முக்கியமானது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தமது பிறந்த நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவிட்டார். தேசிய அளவில் 3-வது அணி அமைப்பதில் எந்த பொருளும் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை ஓங்கி ஒலித்திருக்கிரார். அவருடைய கருத்து வலுப்பெற வேண்டும். நடைமுறைக்கு வர வேண்டும். அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து கேசிஆர், மமதாவை சந்தித்து ஓரணியில் திரட்ட வேண்டும். இவ்வாறு திருமாளவன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications