Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டுமா.. ‘பாஜக பேசும் ...... அரசியல்’.. விடாது விரட்டும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சர்ச்சை மாநில அரசியலில் மிகுந்த விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்தார். அவர் இங்கு பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில், மதுரைக்கு திமுக அளித்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்டு, பாஜகவின் அரசியல் போக்கைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், "தமிழ்நாட்டில் என்றும் சமத்துவத் தீபம் எரியும்; வளர்ச்சியின் ஒளி பெருகும்" என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் என நாட்டின் பல தளங்களிலும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. இதில் பாஜக மத அரசியலில் ஈடுபடுவதாகவும், திருப்பரங்குன்றத்தை 'புதிய அயோத்தி'யாக மாற்ற முயற்சிப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மீதும் திமுக விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாறாக, இந்துக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு மறுப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வருகிறது. திருப்பரங்குன்றம் தொடர்பான இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பாஜகவைச் சாடியுள்ள நிலையில், அவரது அரசைக் கண்டித்து பாஜகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில்தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கு அவர் புதிய மேம்பால திறப்பு விழா, முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த மதுரைப் பயணம் அரசியல் வட்டாரத்தில் தனி கவனம் பெற்றது. அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

அப்பொழுது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். "மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம் என மத்திய அரசு நினைக்கிறது. அதற்காக சப்பைக் கட்டுக் கட்டுகிறது. அரசியல் லாபத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளை முறியடிப்போம். மதுரையில் பிரிவினையை ஒருபோதும் உருவாக்க முடியாது. எந்தப் பந்து வீசினாலும் நாங்கள் சிக்ஸர் அடிப்போம்" என்று சூளுரைத்தார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு ஆறு புதிய திட்டங்களையும் அறிவித்தார். தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் ஒரு பதிவைப் பகிர்ந்துகொண்டார். அதில், "கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்திலான ஹாக்கி மைதானம் - இவைதான் நமது திராவிட மாடல் பேசும் அரசு மதுரைக்கு அளித்த வளர்ச்சி அரசியல்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவை மறைமுகமாகச் சாடிய ஸ்டாலின், “எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும். இதுதான் பாஜக பேசும் …… அரசியல். தமிழ்நாட்டில் என்றும் சமத்துவத் தீபம் எரியும்; வளர்ச்சியின் ஒளி பெருகும்” என்று பதிவு செய்தார். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே “மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …… அரசியலா” எனக் கேள்வி எழுப்பிய அதே பாணியில் இன்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்திய "…… அரசியல்" என்ற வார்த்தைப் பிரயோகம் பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர், டேஷ் அரசியல் என்று வெளிப்படையாகச் சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பின்னணியில், ஸ்டாலின் மீண்டும் அதே பாணியில் பதிவிட்டிருப்பது பாஜக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+