இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:

முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் - அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்.
இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இதுவே உதாரணம்!
முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் - அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்.
— M.K.Stalin (@mkstalin) October 13, 2018
இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்?
லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இதுவே உதாரணம்!
முதல்வர் தன் மீதான ஊழல் புகாருக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் கட்சியின் அமைப்புச் செயலாளரை வைத்து பதிலளிப்பதன் மூலம், திமுக அளித்துள்ள புகார்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமாகிறது.
முதல்வர் தன் மீதான ஊழல் புகாருக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் கட்சியின் அமைப்புச் செயலாளரை வைத்து பதிலளிப்பதன் மூலம், திமுக அளித்துள்ள புகார்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமாகிறது.
— M.K.Stalin (@mkstalin) October 13, 2018
மேலும், இவர்களின் அராஜகத்தால் மாநிலத்தின் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரமே பறிக்கப்பட்டுள்ளது
மேலும், இவர்களின் அராஜகத்தால் மாநிலத்தின் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரமே பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது அரசுத்துறை அமைப்பு. ஆனால், அதன் எதிர்கால முடிவுகள் குறித்து, அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கருத்து கூறியிருந்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications