தலைமேல் கத்தி! அதிமுகவுக்கு நெருக்கடி.. ஸ்டாலின் கையில் எடுத்த 2 அஸ்திரங்கள்! டென்ஷனில் இபிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் தற்போது இருக்கும் உள்கட்சி பிரச்சினை இருக்கும் நிலையில் அக்கட்சிக்கு எதிராக இரு அஸ்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. அதிமுகவுக்கு யார் தலைமை, ஒற்றை தலைமையா கூட்டுத் தலைமையா என்பதற்காக சண்டை நடக்கிறது.

இதனால் அதிமுகவின் இரட்டை தலைமைகளுக்கு கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் "தலைவலி" ஏற்பட்டுள்ளது. அதிலும் ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி மேலிட ஆதரவு இருக்கிறதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் எடுக்கும முயற்சிகள் வெற்றியடைகின்றன.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் இரு குடைச்சல்களும் புதிதாக அதிமுகவினருக்கு திமுக அரசு கொடுக்கவுள்ளது. அதாவது தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை ஆகிய இரு விஷயங்கள் குறித்து விவாதிககப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 17 காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

அது போல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான குழு அளித்த 600 பக்க அறிக்கை குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அதில் சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா மறைந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் சிங் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள்

ஊழல் குற்றச்சாட்டுகள்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை கையில் எடுத்து வருகிறது. இதுவரை 5 முன்னாள் அமைச்சர்களி் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டது. அது போல் முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை தொண்டர் தொடர்பான மோசடி வழக்கையும் வைத்து திமுக நெருக்கடி கொடுத்து வருகிறது.

 கொடநாடு விவகாரம்

கொடநாடு விவகாரம்

இது போதாகுறைக்கு கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டுள்ளது. அதிமுகவில் அதிமுகவினரே தலைவலியை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் திமுக வேறு வழக்கு விசாரணைகளை வைத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. அதிமுக மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வேறு இன்னும் சில நாட்களில் வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+