“இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது.. தவெக அரசை அகற்ற தயாராகுங்கள்”.. மு.க.ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களே தவெக ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்." என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, பேசிய அவர், தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

MK Stalin

மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவை தவிர பாலியல் குற்றங்கள், கொலை - கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை. கடந்த சில நாட்களாக குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். மின் வெட்டு, அரிவாள் வெட்டு, விலைவாசி உயர்வு என நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ள ரீல்ஸ் ஆட்சியாக இன்றைய ஆட்சி இருக்கிறது.

பத்திரிகை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சரி, சமூக வலைதளங்களைப் பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரச் செய்திகள் இல்லாத நாளே இன்றைக்கு நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதைப்பொருள் நடமாட்டமா? என்பதாகத்தான் இன்றைய தவெக ஆட்சி நடந்து வருகிறது.

மேடைக்கு மேடை அவர் என்ன கத்துகிறார்.. 'தீய சக்தி, தீய சக்தி' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். ஆக, உண்மையான தீய சக்தி யார் என்பது இப்போது நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, "வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும்" என்றேன். ஆனால், இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டால்,தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களே தவெக ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சராக இருக்கக்கூடியவர், "இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி" என்று சொன்னார். இல்லை, இல்லை. மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி என்று நான் சொன்னேன். அது இன்றைக்கு மாறி, பாலியல் வன்கொடுமையா, போதைப்பொருள் நடமாட்டமா என்ற அந்த இரண்டுக்கு இடையேதான் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையை பாதுகாப்பதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து, இன்றைக்கு நாட்டிலே ஆளுகின்ற அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+