தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி C-Voter வெளியிட்டுள்ளது.

MK Stalin the best TN cm candidate ABP Opinion Poll

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று (பிப்.26) வெளியிட்டார்.

அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேட்பு மனு தாக்கல் துவக்கம்: மார்ச் 10
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19
வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

இந்நிலையில், ஏபிபி C-Voter ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப்போவது என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 41 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58-66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 28.6 சதவிகித வாக்குகளை மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வியையும் ஏபிபி மக்கள் முன்வைத்தது.

இதில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த முதல்வர் வேட்பாளர் போட்டியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி இரண்டாமிடம் பிடித்துள்ளார். 7.8% பேர் சசிகலா தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், உடல்நலம் காரணமாக அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்காமல் வெளியேறிய ரஜினிகாந்தை முதல்வராக காண வேண்டும் என்று 3.2 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+