"சீக்ரெட்".. மூன்று ரூட்களில் வலம் வரும் "மெகா புள்ளிகள்".. திமுகவினரால் பரபரக்கும் அண்ணாசாலை..!
திமுக அமைச்சர்கள், அதிகாரிகளின் லிஸ்ட் ரெடியாகிவிட்டதாம்
சென்னை: அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையில் தினம்தோறும், ஏதாவது ஒரு புது தகவல் அக்கட்சியில் இருந்து கசிந்தவாறே இருக்கிறது.. இதனால் அண்ணாசாலையே படுபிஸியாக காணப்படுகிறது..!
ரிசல்ட் வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக வழக்கம்போல, தன்னுடைய நம்பிக்கையை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறது. திமுக தரப்போ அதையும் தாண்டி, செம பிஸியாகிவிட்டது..
ஒருபக்கம் யாரெல்லாம் அதிகாரிகள், இன்னொரு பக்கம் யாரெல்லாம் அமைச்சர்கள் என்ற லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இந்த லிஸ்ட்டுகளை உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் பார்த்து பார்த்து தயார் செய்ததாக சொல்லப்பட்டது..

காலக்கெடு
குறிப்பாக, வழக்கு பின்னணி விவரங்கள் உள்ளவர்கள், அந்த வழக்கின் தன்மை, வழக்கின் காலக்கெடு உள்ளிட்டவைகள் குறித்தெல்லாம் கணக்கு போட்டுதான் விஐபிக்கள் தேர்வாகி உள்ளனர்.. இவர்கள் 2 பேரும் ரெடி செய்த பட்டியலை, திமுக தலைவர் இறுதி செய்துள்ளார். இதெல்லாம் கொடைக்கானலிலேயே நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

மும்முனை ரூட்
இப்போது ஸ்டாலின் சென்னைக்கு வந்துவிட்டார்.. அடுத்தடுத்த பணிகளிலும் இறங்கிவிட்டார்.. ஆனால், அந்த லிஸ்ட்டில் யார் யார் பெயர் உள்ளது என்று மட்டும் தெரியவில்லையாம்.. இதை தெரிந்து கொள்வதற்காகவே அந்த புள்ளிகள், 3 விதமான வழிகளில் முயன்று வருகிறார்களாம்..

லெட்டர்
ஒரு பக்கம் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு முயற்சிக்கிறார்கள்.. மற்றொரு பக்கம் ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் காய் நகர்த்தும் படலத்தை துவங்கி உள்ளனர்.. இன்னொரு பக்கம், சாதி சங்கங்கள் மூலம் ஸ்டாலினுக்கே ஸ்டிரைட்டாக லெட்டர் எழுதி அமைச்சரவையில் சாதி கோட்டா மூலம் நுழைய முயற்சிக்கிறார்களாம். இப்படி, மும்முனை ரூட்களில் திமுகவினர் இறங்கி உள்ளனர்..

ஆர்வம்
அந்த லிஸ்ட்டில் தாங்கள் இருக்கிறோமோ இல்லையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. ஆனால் எவ்வளவுதான் முயற்சித்தாலும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் யார் யார் என்ற விவரங்கள், கடுகளவும் கசியாது என்கிறார்கள்.. காரணம், ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் உள்ளிட்ட சிலரை தவிர வேறு யாருக்குமே அந்த சீக்ரெட் தெரிய வாய்ப்பே இல்லையாம்.. ஆனாலும், ரிசல்ட் வரும்வரை அந்த "மும்முனை ரூட்" தொடரும் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications