நாளை மொத்தமாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு? முழு லிஸ்ட் ரெடி.. ஆட்டத்தை கலைத்து ஆடுகிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.
வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.

முன்பு போடப்பட்ட பயண திட்டம் அப்படியே மாற்றப்பட்டு உள்ளதாம். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
பயண திட்டத்தில் மாற்றம்: அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
பயண திட்டத்தில் மாற்றம்: அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்
சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .
உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர்.
ஆனால் ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றப்படும். 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். நாளை இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் + உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உட்பட அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.
அதை மனதில் வைத்தே சமீபத்தில் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications