அதிகரித்த கொரோனா.. நாளை முதல், மாவட்டங்களுக்கு நேரடியாக விசிட் செய்யும் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மெற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு சராசரியாக 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருகட்டமாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரு தினங்களில் ஆய்வு மெற்கொள்ள உள்ளார்.
முதல்கட்டமாக சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் தினசரி பாதிப்பு சராசரியாக 3 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது. ஈரோட்டில் 1,500ஐ விட அதிகமாகவும், சேலத்தில் 600க்கு அதிகமாக உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள இந்த மாவட்டங்களில் முதல்வர் முதலில் ஆய்வு செய்கிறார்.
நாளை மறுநாள், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் அப்போது மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications