Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் ஸ்டாலின் செய்த சம்பவம்..தமிழ்நாட்டிற்குள் வரும் கூகுள்! இனிதான் காத்திருக்கு கச்சேரியே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் மற்றும் தமிழ்நாடு அரசு , தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய செயல்பாட்டு சூழல் அமைப்பை நிறுவுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிலையில் தமிழகத்தில் கூகுள் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளிலேயே சுமார் 900 கோடி முதலீடுகளை ஈர்த்ததாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்தது.

mk stalin us visit mk stalin google

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திலும், கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்து பேசினார். குறிப்பாக கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சருடன் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்து கூகுள் நிறுவனம் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதில்,"தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க உள்ளது. கூகுள் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகளுக்கான முன்னேற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த சாதனைகள், திறன் மேம்பாடு போன்ற பகுதிகளில் வளர்ச்சியை வழிநடத்த உள்ளது.

இன்று (ஆகஸ்ட் 31,2024 ) கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான புதுமைகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள். திறன் மேம்பாடு மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலை சார்ந்த மேம்பாடு போன்ற முக்கிய பகுதிகளில் முன்னேற்றங்களை மேம்படுத்த உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்தின் மவுண்டன் வியூ அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கூகுளின் கிளவுட் தளத்தின் தலைவர் அமித் ஸவேரி, கூகுள் பிக்ஸல் வணிக அலகின் துணைத் தலைவர் நந்தா ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (Guidance தமிழ்நாடு) ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்த புரிந்துணர்வு பரிமாற்றத்தின் போது தமிழ்நாடு தொழில்துறை. முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் மற்றும் Guidance தமிழ்நாடு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, கூகுள் நிறுவனம் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (Guidance தமிழ்நாடு) உடன் இணைந்து, ஒரு வலுவான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு சூழலை உருவாக்க உள்ளது. இது நுட்பமான தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகக்கூடியதாகவும், மேலும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உலகளாவிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுவதை மையமாகக் கொண்டு வலுவான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு சூழலின் வளர்ச்சியை ஆதரிக்கும்.

கூகுள் மற்றும் தமிழ்நாடு அரசு கீழ்காணும் முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புகளை ஆராய்ந்து வருகின்றன:

பிக்ஸல் 8 மொபைல்களின் உற்பத்தி: இந்தியாவில் தயாரிக்கப்படும் பிக்ஸல் 8 சாதனங்கள், தமிழ்நாட்டில் உள்ளூர் கூட்டாளிகளுடன் தயாரிக்கப்படுதல்.

திறன் மேம்பாடு மற்றும் கல்வி: கூகுள். தமிழ்நாட்டின் இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் மேம்படுத்த அரசுடன் இணைந்து பணி புரியும். 'நான் முதல்வன்' என்ற திறன் மேம்பாட்டு தளத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு கற்றல் முன்மொழிவுகளை ஆராய்வது மற்றும் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தி, எதிர்காலத்திற்கான இளைஞர்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிவது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையான முயற்சிகள்: கூகுள். தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து, Google வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப தலைவர்களுடன் மேற்பார்வை மற்றும் தகவல் தொடர்பை வழங்கும். செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு உள்ளூர் சவால்களை தீர்க்கவும், சமூகத்தில் புதுமை மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வை ஊக்குவிக்கும் வடிவமைப்புடன் செயல்பட உள்ளது. கூகுள் தகுதியான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தொழில்முனைவோர் நிதியுடன் கூடிய
கிளவுட் கிரெடிட்கள், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வணிக ஆதரவை வழங்கி, அவர்களின் வளர்ச்சியை வேகமாக்கும்.

சிறு குறு நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற பொருளாதாரம்: தமிழ்நாட்டின் சிறு குறு நிறுவனங்கள் உயர்வு பெற கூகுள் மற்றும் கூகுள் கிளவுட், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கூகுள் கிளவுட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறந்த நெட்வொர்க் சந்தையில் பயன்படுத்த உதவிக் கூடிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இது எளிதாக அணுகலை உருவாக்க, செயல்களை தானாகச் செய்ய, முடிவெடுத்தலை மேம்படுத்த, மற்றும் தொழில்நுட்பப் பயன்படுத்தலின் மூலம் புதுமையை ஊக்குவிக்க உதவுகிறது.

கூகுள், சமூகத்திற்கு அதிக அக்கறை அளிக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க முனைகிறது. இதன் சவால்களை எமது செயற்கை நுண்ணறிவு விதிகளின் அடிப்படையில் கையாள்கிறது. உலகின் மிக அவசரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்க அடிப்படையான ஆராய்ச்சியின் மூலம் எங்களை முன்னேற்றுகிறது. பரந்த சமூகங்களுடன் ஒத்துழைப்பது, உண்மையான தாக்கத்துடன் முன்னேற்றத்தை விரைவாக சாதிக்க உதவுவதோடு, இந்த மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் முன்னேற்றுவதை எங்கள் நோக்கம்" என கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+