திமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..!
சென்னை: தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை சைக்கிளிங் உடற்பயிற்சிக்கு சென்ற போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இப்போது தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.

நவீன வடிவில்
இந்திக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுவடைந்து வருகிறது. கைகளில் பதாகைகள் தாங்கி அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி போராடியது அந்தக் காலம் என்றால், சொல்லவரும் கருத்தை தொழில்நுட்ப த்தால் வெளிப்படுத்தி அந்த தகவல் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைய வைப்பது இந்தக் காலம்.

தமிழ் எங்கள் உயிர்
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் வைரலாகவும் உள்ளது. ''தமிழ் எங்கள் உயிர்'' என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட்டில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னணியில் தமிழக வரைபடம் இருக்கிறது. சைக்கிளிங் உடற்பயிற்சிக்கு சென்ற போது இந்த டி-ஷர்ட்டை மு.க.ஸ்டாலின் அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு
இதனிடையே இந்தி மொழியை திமுக ஒரு போதும் எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பை தான் எதிர்த்து வருவதாகவும் அக்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்தியை மும்மொழி கொள்கை உள்ளிட்ட பல வழிகளில் தமிழகத்திற்குள் திணிப்பதை தான் திமுக கண்டித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படியோ தமிழகத்தில் நவீன மொழிப்போர் ஒன்று இணையத்தில் தற்போது நடைபெற்று வருவதை மட்டும் அறிய முடிகிறது.

புதிய டி-ஷர்ட்
தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட்டை திமுகவினர் இனி நிச்சயம் அணியத் தொடங்குவர். இதனால் இந்த டி-ஷர்ட்டும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பை பெறும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் திமுகவின் இந்தி எதிர்ப்பு அஸ்திரங்களை முறியடிக்க பாஜக காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications